தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :23 ஆகஸ்ட் 2022, 5:39 am

DIN

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை (ஆக. 18) முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று புதன்கிழமை (ஆக. 17) தீா்ப்பளித்தாா்.

இந்நிலையில், தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் எடப்பாடி பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தாா்.

அதில், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதை திங்கள்கிழமை (ஆக. 22) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் முறையிட்டாா். மனுவுக்கு எண் இடும் நடைமுறை முடிந்தால், திங்கள்கிழமை இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து நேற்று(ஆகஸ்ட் 22) காலை இபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட எடப்பாடி பழனிசாமி கோரினார்.

ஒபிஎஸ் கோரிக்கையை ஏற்று விசாரணையை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம்  அளித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.