சென்னை: பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும்.
காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். காய்கறிகளை சுத்தம் செய்தல், அவற்றை சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு, தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும், ஆசிரியர்களும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து, தரத்தை அறிய வேண்டும்.
தரமான மற்றும் சுகாதாரமான உணவை போதுமான அளவுக்கு மாணர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வெளிட்டுள்ள வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.