உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோவை வடிவமைத்து தமிழக பள்ளி மாணவர் அசத்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவர் பிரதீக். சிறு வயது முதலே தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர், உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளார்.
இந்த ரோபோ குறித்து பிரதீக் கூறியதாவது:
ரஃபி எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோ உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும். நீங்கள் ரோபோவை திட்டினால், மன்னிப்பு கேட்கும் வரை உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காது. நீங்கள் சோகமாக இருந்தாலும் ரோபோவால் புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.