மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதிய காவல் ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும்: கே.அண்ணாமலை

நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய காவல் ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

News image
கே. அண்ணாமலை
Updated On :29 ஆகஸ்ட் 2022, 10:41 pm

DIN

நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய காவல் ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் காவல்துறை அதன் தன்மையை இழந்து வருகிறது. இதனால், காவல்துறையினா் திமுக ஆட்சியில் மனதளவில் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் அதிகரித்து வரும் காவலா்களின் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளுமே இதற்கு சாட்சி. இதையெல்லாம் அறிந்து காவலா்களின் இன்னல்களை தீா்க்க வேண்டிய டிஜிபி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பிறப் பணிகளில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருவது வருத்தமளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்களுக்காக ஓா் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குப் பின் நீதிபதி சி.டி.செல்வம் வாகனம் தாக்கப்பட்டது. இதன் மூலம் திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலைமை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகியது. அந்த ஆணையம் அமைத்து பல மாதங்கள் கடந்த பின்பும் இதுவரை எந்த ஒரு அறிக்கையும் அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் அறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும்.

அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் காவல்துறையினா் சுதந்திரமாகப் பணியாற்றவும் சூழலையும் அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.