மதுரையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (14). இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வார விடுமுறை முடிந்து இன்று மாணவர் பிரபாகரன் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது ஆரப்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, படியின் அருகில் பயணம் செய்த மாணவர் திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதைப் பார்த்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை நிறுத்தி மாணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், சிகிச்சையில் இருந்த அவர், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை... விஜய்யின் உறுதிமொழி!

ஃபின் ஆலன் அதிரடி சதம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

