கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரிக்கை

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி வழங்கக் கோரி கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். 
கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரிக்கை

எடப்பாடி: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி வழங்கக் கோரி கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தை திங்களன்று கோரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட கோரணம்பட்டி கிராமப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சரிவர பணி வழங்கவில்லை எனவும் ஏற்கனவே பணிபுரிந்த காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையை முழுவதும் வழங்கக் கோரியும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து ஆர்பாட்டக்காரர்களிடம் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி, சம்பந்தப்பட்ட ஊராட்சிப் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட பணிகள் நிலுவையில் உள்ளதாகவும், அவை விரைவில் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழக்கம்போல தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com