காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 12:14 pm

DIN

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் நாளை(ஆக.31) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 350 சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தொலைதூர விரைவுப் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர்களுக்கு செல்வோர், சென்னை திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.