

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,45,000 கன அடியாகக் குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீரப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்தது. நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வந்தது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று பிற்பகலில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,65,000 கன அடியாகவும் மாலையில் வினாடிக்கு 1,45,000 கன அடியாகவும் குறைந்தது.
நீர்வரத்து சரித்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1,45,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,22,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

காய்கறி சந்தையில் மருத்துவக் கழிவுகள்: மாட்டுத்தாவணி வியாபாரிகள் கடும் எதிா்ப்பு

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும்: சித்தராமையா

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 5,100 பெண் ஊழியா்கள் நியமனம்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

