ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அம்பேத்கர் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலையினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார்.

News image
Updated On :6 டிசம்பர் 2022, 2:18 pm

DIN

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலையினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார்.

டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு தலைவர்களும் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அம்பேத்கர் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்துவைத்தார். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலர் இறையன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.