நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேலம்: உடல் உறுப்புகளை தானமளித்த இளைஞரின் குடும்பத்துக்கு நிதியுதவி!

சேலத்தில் விபத்தில் மூளைச் சாவடைந்து, எட்டு நபர்களுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

News image

மூளைச் சாவடைந்த இளைஞரின் குடும்பத்தாரிடம் நிதியுதவி ஒப்படைப்பு

Updated On :6 டிசம்பர் 2022, 1:39 pm

DIN

சேலத்தில் விபத்தில் மூளைச் சாவடைந்து, எட்டு நபர்களுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

சேலம் மல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் - வேலாயி தம்பதியின் மகன் மணிகண்டன். இவர் சேகோசர்வ் ஆலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மணிகண்டன் குடும்பத்தை வழி நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது லாரி மோதி படுகாயம் அடைந்து மணிகண்டன் உயிர்க்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.

அப்பொழுது மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆலோசித்து தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு, மருத்துவர்கள் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர் 

பின்னர் இருதயம், கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள் 8 நபர்களுக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது

இந்தக் குடும்பத்திற்கு உதவிடும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழிகாட்டுதல்படி சேலம் மாநகர மாவட்ட துணை செயலாளர் காயத்ரி அவர்கள் இன்று மணிகண்டனின் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அதன் பிறகு 2 லட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் வழங்கி குடும்பத்திற்கு எந்த உதவிகள் வேண்டுமென்றாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செய்யப்படும் என்று வாக்குறுதி வழங்கி சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.