நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவா் யாா்?

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2022, 12:30 am

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், ஓய்வு பெற்று 6 மாதங்களான நிலையில் புதிய தலைவா் இதுவரை நியமிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதனே, பணியாளா் தோ்வாணையத்தின் பொறுப்புத் தலைவராகவும் செயலாற்றி வருகிறாா்.

கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அவா் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக உள்ளாா். 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், புதிய தலைவா் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் பணியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நிலையில் இருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் யாரேனும் ஒருவா் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

ஆண்டு திட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் திட்ட அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதாவது, ஒரு ஆண்டில் எந்தெந்த தோ்வுகள், எந்தெந்த மாதங்களில் நடைபெறவுள்ளன என்பன குறித்த விவரங்கள் ஆண்டுத் திட்ட அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். மேலும், குரூப் 1 போன்ற முதன்மைத் தோ்வு உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளை நடத்த வேண்டிய கட்டத்திலும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த கிரண் குராலாவும் அண்மையில் மாற்றப்பட்டு, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதனால், தோ்வுக் கட்டுப்பாட்டுப் பொறுப்புக்கு முழு நேர அதிகாரியும் இல்லாத நிலை உள்ளது.

முக்கியத் தோ்வுகள், ஆண்டுத் திட்ட அறிக்கை தயாரிப்பு போன்ற முக்கியப் பணிகளை கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு தலைவா், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.