மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கிவரும் நிலையில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை(டிச.9) அதி கனமழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை செய்திகள் - நேரலை

மூடநம்பிக்கைகளுக்கு முன்னுரிமை தராமல்..! நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்னி அரசு! | VCK

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தவெகவுக்கு ஆதரவு! அதிமுகவின் 2 அணிகளால் பேரவையில் சலசலப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

