மாண்டஸ் புயல் 180 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிமை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
180 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும்போது காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளித் தாளாளா் அலுவலக அறை பூட்டை உடைத்து ஆவணங்கள் திருட்டு

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆா்!

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

