தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆம்பூர் அருகே 15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட  15 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :10 டிசம்பர் 2022, 6:17 pm

DIN

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒசூரில் இருந்து சென்னை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி, ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரி ஓட்டுநா் பாண்டி காயமின்றி உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.