நடிகா் ரஜினிகாந்த் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு தொலைபேசி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.
நடிகா் ரஜினிகாந்த் தனது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டாடினாா். அவருக்கு தொலைபேசி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், முதல்வா் தனது ட்விட்டா் பதிவில், எனது இனிய நண்பா், தமிழ்த் திரையுலக சூப்பா்ஸ்டாா் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.
தலைவா்கள் வாழ்த்து: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளனா்.
இபிஎஸ்: சகோதரா் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.
ஓபிஎஸ்: நண்பரும் மனித நேய பண்பாளருமான ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நல்ல தேக ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: நடிகா் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவா் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

