எட்டு காளைகளுடன் ஜல்லிக்கட்டுக்குத் தயாரான திருநங்கை
மதுரை: வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து தயாராக இருக்கிறார் திருநங்கை கீர்த்தனா.
எட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பயிற்சி அளிப்பதையே தனது முழு நேரப் பணியாக செய்து வருகிறார் கீர்த்தனா. காளைகளை பராமரிக்க அவரது மற்ற தோழிகளான திருநங்கைகளும் உதவி செய்து வருகிறார்கள்.
வழக்கமாக ஜனவரி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று காளைகளை அடக்க முடியும். மதுரை மாவட்டம் பொட்டபனையூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா இது பற்றி கூறுகையில், வலிமை மற்றும் வீரத்தைப் பறைசாற்ற பாலினம் தடையல்ல என்பது பல ஆண்டுகாலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது என்கிறார்.
இது பற்றி கீர்த்தனா மேலும் கூறுகையில், என்னிடம் 8 காளைகள் உள்ளன. வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அவற்றுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். பலருக்கும் பல துறைகளில் ஆர்வம் இருக்கும். எனக்கு காளைகளுக்கு பயிற்சி அளித்து, பாரம்பரிய விளையாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. எனக்குக் குழந்தைகள் கிடையாது, இந்த காளைகளைத்தான் என் குழந்தைகளாக பாவிக்கிறேன்.
இதையும் படிக்க.. 72 வயதாகும் சூப்பர் ஸ்டார் பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்
இந்த காளைகள் வெற்றி பெறும்போது, என் பிள்ளைகள் ஒரு போட்டியில் வென்றால் எந்த அளவுக்கு மகிழ்வேனோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருமுறை வாக்களித்த வாக்காளா்

கடமையை உணா்ந்த இளம் தலைமுறை

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீத வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


