கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிரான மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :14 டிசம்பர் 2022, 10:25 am

DIN

கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

மேலும், தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயிரிழந்த மாணவியின் தாயார், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மாணவியின் உடலில் ஏற்பட்ட காயம் குறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர். மேலும், ஜாமீனை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.