தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது!
சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.380 குறைந்துள்ளது.


சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.380 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்படி, டிச.15-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.320 குறைந்து, ரூ.40,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,060 ஆக விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.72,700-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
வியாழக்கிழமை நிலவரப்படி
தங்கம் கிராம் - ரூ.5,060
தங்கம் ஒரு சவரன் - ரூ.40,480
வெள்ளி கிராம் - 72.70
ஒரு கிலோ வெள்ளி - ரூ.72,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...