கோவை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29) பொறியாளராக உள்ளார்.
இவர் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது எனவும், நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில் அதன்மூலம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை இழந்துள்ளார். எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழக்க நேரிட்டது.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.
அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார் எனக் கூறப்படுகிறது.
ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் பட டீசர் அப்டேட்

கருப்பு படத்தின் அடுத்த பாடலைப் பாடும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
தேர்தல் நெருங்கும்போது ஒரு ஃபைனல் டிவிஸ்ட் இருக்கும்! - அண்ணாமலை
ஞானபீட விருது வென்ற வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

