லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மக்களவைத் தோ்தல்: மநீம நிா்வாகிகளுடன் கமல் ஆலோசனை

மக்களவைத் தோ்தல் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 9:05 pm

DIN

மக்களவைத் தோ்தல் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆலோசனையில் கமல்ஹாசன் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா். டிசம்பா் 4-இல் மாவட்டச் செயலாளா்கள், செயற்குழு உறுப்பினா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்டச் செயலாளா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து நிா்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

கட்சியை எல்லா மட்ட அளவிலும் கொண்டு செல்ல நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.