தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேவூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற கூலித்தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்தார். 

News image
தேவூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் நீரில் முழ்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி டி.கார்த்தி
Updated On :24 டிசம்பர் 2022, 6:29 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற கூலித்தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்தார். 

நாமக்கல் மாவட்டம், சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் டி.கார்த்தி மற்றொரு கார்த்தி, சுரேஷ்  ஆகிய மூன்று இளைஞர்கள் தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளனர். அப்போது மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திருநாவுக்கரசு மகன் கார்த்தி (26) எதிர்பாரதவிதமாக நீரில் முழ்கி விட்டார். நீரில் முழ்கிய அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

நீரில் முழ்கிய கூலித்தொழிலாளியை இரவு முழுவதும் நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று(சனிக்கிழமை) காலை அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டு இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.