தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிதி இழப்புக்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு: உயர் நீதிமன்றம்

கடமையைச் செய்ய தவறியதால் ஏற்படும் நிதி இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
நிதி இழப்புக்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு: உயர் நீதிமன்றம்
Updated On :24 டிசம்பர் 2022, 10:19 am

DIN

சென்னை: கடமையைச் செய்ய தவறியதால் ஏற்படும் நிதி இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவைச்சிகிச்சையின்போது கண் பார்வை பாதிக்கப்பட்டதாக திருவாரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.

அறுவைச்சிகிச்சையின்போது கண் பார்வையை இழந்ததால், வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் திருவாரூரைச் சேர்ந்த விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்  என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இழப்பீடு தராவிட்டால் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மருத்துவமனையில் பொருள்களை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பொருள்களை ஜப்தி செய்வதை எதிர்த்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், நிதி இழப்பை தொடர்புடைய அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என்று இழப்பீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.