சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரயில்வே மேம்பாலப் பணி: சேலம் வழிச் செல்லும் 4 ரயில்கள் ரத்து!

காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலப் பணி நடப்பதால் சேலம் வழியாகச் செல்லும் நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :24 டிசம்பர் 2022, 6:18 am

DIN

சேலம்: காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலப் பணி நடப்பதால் சேலம் வழியாகச் செல்லும் நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கு பணி நடைபெற்று வருகிறது.  இதனால் சேலம் வழியாக செல்லும் ரயில்களில் சில ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதன்படி சென்னை சென்ட்ரல் -கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வரும் ஜனவரி 3 ,4 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதுபோல சென்னை சென்ட்ரல் -கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் ஜனவரி 4-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

சேலம் - அரக்கோணம் ரயில் வரும் டிச. 26 , 27 மற்றும் ஜனவரி 3 ,4 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது காட்பாடி - அரக்கோணம் இடையே ஒரு பகுதி போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் அரக்கோணம் - சேலம் ரயில் வரும் 27, 28 ஜனவரி 4 ,5 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படுகிறது. 

அரக்கோணம் - காட்பாடி இடையே ஒரு பகுதி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.