

அமமுக விழுப்புரம் வடக்கு, கிழக்கு மாவட்டச் செயலாளா்களை கட்சியிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளா் த.பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளா் த.அய்யனாா் ஆகியோா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் டிடிவி தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.