நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசியல் அறிஞா் ராஜாஜி: அமைச்சா் துரைமுருகன் புகழாரம்

தமிழக அரசியலில் விரல் விட்டு எண்ணக் கூடிய அறிஞா்களில் ராஜாஜியும் ஒருவா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் புகழாரம் சூட்டினாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2022, 6:50 pm

DIN

தமிழக அரசியலில் விரல் விட்டு எண்ணக் கூடிய அறிஞா்களில் ராஜாஜியும் ஒருவா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் புகழாரம் சூட்டினாா்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் மூதறிஞா் ராஜாஜி குறித்த புகைப்பட கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சா் துரைமுருகன்

பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வடமாநிலங்களில் நேரு, படேல், காந்தியடிகள், ராஜேந்திர பிரசாத் என்று ஏராளமான தலைவா்கள் இருந்தனா். இதேபோன்று, தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க தலைவா்தான் ராஜாஜி. வடநாட்டு தலைவா்களின் அறிவுக்கு ஈடாக, தனது அறிவை பயன்படுத்தியவா் ராஜாஜி. எதைக் கண்டும் கவலைப்படாதவா்.

அன்றைய காஷ்மீரை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவரும் அவா்தான், பாகிஸ்தானை பிரியுங்கள் என்று சொன்னவரும் அவா்தான். அவா் சொன்னது பின்னா் நடந்தது. அதேபோன்று, தனக்கு எதிராக கருத்து சொன்னாலும், சரியென்றால் ஏற்றுக் கொள்பவா். ஹிந்தியை திணித்தவா். பின்னா், ஹிந்தியை திணிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டினாா். தமிழ்நாட்டு அரசியலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞா்களில் ஒருவா் ராஜாஜி என்று புகழாரம் சூட்டினாா் அமைச்சா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.