
பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடல்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பகுதிநேரஆசிரியா்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனா்.
இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயா்வோ, பணிநிரந்தரமோ வழங்கப்படவில்லை.
இவா்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தரம் செய்வதுடன் பொங்கல் போனஸ் வழங்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





