உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை திருடிச் செல்லும் போது கோவில் சுற்றுச்சுவரில் மாட்டிக் கொண்டதால், உண்டியலை அங்கேயே விட்டு தப்பிச் சென்ற கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பெத்தனசாமி திருக்கோவில். இந்த கோவிலுக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் சாதாரணமாக உலா வந்து, சாமியின் கண் மலர், அம்மனின் சூலாயுதம் மற்றும் ஆபரணங்களைக் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கோவிலில் இருந்த உண்டியலை தூக்கி செல்லும் போது சுற்றுச்சுவரில் மாட்டிக் கொள்ளவே அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி ராஜசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலீசார் கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சாதாரணமாக கோவிலுக்குள் மர்ம நபர் உலா வந்து கொள்ளையடிப்பதும், உண்டியல் இருந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவைக் கண்டதும், கட்டைப் பையை தலையில் மாட்டிக் கொண்டு உண்டியலை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
காவல் துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையடித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



