
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து ஏழாம் நாளான வியாழக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான வியாழக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் நீள் முடிகிரீடம், ரத்தின காதுகாப்பு, ரத்தினஅபயஹஸ்தம், பவளமாலை, நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.