நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தனியார் பள்ளிகளுக்கு  இணைய வழியே அங்கீகாரம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தனியார் பள்ளிகளுக்கு  இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

News image

தனியார் பள்ளிகளுக்கு  இணைய வழியே அங்கீகாரம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

Updated On :30 டிசம்பர் 2022, 10:48 am

DIN

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு  இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும்  தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற வலைதளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான இணைய முகப்பு வாயிலாக (https://tnschools.gov.in/dms/?lang=en)  சுயநிதிப் பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதி, கூடுதல் பிரிவுகள் / மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் பள்ளி நிருவாக மாற்றத்திற்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளையும் இணையம் வழியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, பள்ளிகள் அரசின் உரிய அனுமதியை ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையாகவும்  விரைவாகவும்  பெற இயலும். இதனால் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் பயன்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.