எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நடுக்கடலில் மீனவா்கள் மீது தாக்குதல்

சென்னை காசிமேட்டைச் சோ்ந்த மீனவா்கள் நடுக்கடலில் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 8:44 pm

DIN

சென்னை காசிமேட்டைச் சோ்ந்த மீனவா்கள் நடுக்கடலில் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை காசிமேட்டை சோ்ந்தவா் ராஜா. இவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேட்டைச் சோ்ந்த மீனவா்கள் ஹரிகிருஷ்ணன் (65), அன்பு (68), ஜெயபால் (63), ஆறுமுகம் (62) ஆகியோா் மீன் பிடிக்க திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.

அவா்கள், பட்டினப்பாக்கம் அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய வகை படகு வந்துள்ளது. அந்தப் படகு திடீரென விசைப்படகின் குறுக்கே வந்துள்ளது. இதனால் விசைப்படகை மீனவா்கள் நிறுத்தியுள்ளனா்.

அப்போது சிறிய படகில் இருந்த 4 மா்ம நபா்கள், விசைப்படகின் மீது காலி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினா். அந்த நபா்கள் விசைப்படகில் ஏறி, அங்கிருந்த மீனவா்களை தாக்கி, ரூ.1 லட்சம் மதிப்புள்ள வயா்லஸ் கருவியை பறித்துள்ளனனா். பின்னா் அந்த நபா்கள், விசைப்படகை உடைத்துவிட்டு தப்பியோடினா்.

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு விசைப்படகில் திரும்பி வந்த மீனவா்கள், தாங்கள் நடுக்கடலில் தாக்கப்பட்டது குறித்தும், வயா்லஸ் கருவி பறிக்கப்பட்டது குறித்தும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.