47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அண்ணாவின் நினைவு நாள்: கும்மிடிப்பூண்டியில் திமுகவினர் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53 ஆம் நினைவு நாள் திமுகவினரால் கும்மிடிப்பூண்டியில் அனுசரிக்கப்பட்டது.

News image
கும்மிடிப்பூண்டியில் திமுகவினரால் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
Updated On :3 பிப்ரவரி 2022, 6:27 am

DIN

கும்மிடிப்பூண்டி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53 ஆம் நினைவு நாள் திமுகவினரால் கும்மிடிப்பூண்டியில் அனுசரிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

நிகழ்விற்கு திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், நகர செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து திமுகவினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் 14 திமுகவினரும் கட்சியினரும் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்போம் என உறுதி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக நகர நிர்வாகிகள் கே.என்.பாஸ்கர், கருணாகரன், இஸ்மாயில், அக்கீம், காளிதாஸ், டி.ஆர்.ராஜா, வெங்கடேசன், முனியாண்டி , தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் முத்துகுமரன், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக்,  அர்ச்சுனன், சாண்டில்யன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.