தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அண்ணா நினைவுநாள்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை

நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு நீடாமங்கலம்(வடக்கு) ஒன்றிய, பேரூர் தி.மு.க.வினர் அவரது சிலைக்கு மாலையணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

News image

நீடாமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலையணிவித்த திமுகவினர்.

Updated On :3 பிப்ரவரி 2022, 7:43 am

DIN

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு நீடாமங்கலம்(வடக்கு) ஒன்றிய, பேரூர் தி.மு.க.வினர் அவரது சிலைக்கு மாலையணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், தி.மு.க. சட்டத் திருத்த குழு உறுப்பினர் பி.இராசமாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் சோ.செந்தமிழ்ச்செல்வன்,ஒன்றிய பொறுப்பாளர் சி.கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் ரா.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி சேகர், ஒன்றிய முன்னாள் செயலாளர் விசு.அண்ணாதுரை, நீடாமங்கலம் பேரூர் இளைஞரணி ஆர்.ஆர்.ராமராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பழக்கடை கோவிந்தன், ராம.அன்பரசு, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆய்குடி வேலு, சத்தியவானன், முத்துகிருஷ்ணன், நகர் சக்கரவர்த்தி, ஜானகிராமன், குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் ஆதி.ஜனகர்,எம்.ஆர். ராஜேந்திரன், நகரசெயலாளர் இ.ஷாஜஹான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கோ.அரிகிருஷ்ணன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.