தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றினால் கடும் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

கூத்தாநல்லூர் நகராட்சியில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:18 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிருஷ்ணவேணி வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, ஆணையர்  கூறியுள்ளது..

கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகளிலும் மனிதக் கழிவுகள் அகற்றுதல் ஓராண்டாக முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட செயலை யாரும் செய்யக்கூடாது. 

தடையை மீறி, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றினால், அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும், கூத்தாநல்லூர் நகராட்சிக்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகராட்சி மூலம், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட, கழிவு நீர் வாகனம் வாங்கப்பட உள்ளது. அதற்கான கோப்புகளை சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.