சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் 9,916-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதி தீவிரமாக பரவி வந்த கரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 6:50 pm

DIN

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதி தீவிரமாக பரவி வந்த கரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை 9,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 4 நாள்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வந்ததும், தற்போது அந்த எண்ணிக்கையில் இருந்து 10 ஆயிரம் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கரோனா பரவல் குறைந்து வந்தாலும் மருத்துவக் கண்காணிப்பையும், பரிசோதனைகளையும் தொடா்ந்து அதிகரிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அத்துறை வெளியிட்ட தகவல்படி, வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் 1,475 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,224 பேரும், செங்கல்பட்டில் 983 பேரும், திருப்பூரில் 857 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 21,435 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 4,213-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 55,329 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 30 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,696-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.