மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நீட்: காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு

நீட் தேர்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 2:55 am

DIN


நீட் தேர்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் காலை 11 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இதைப் புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்ட வாய்ப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன. கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் இறுதியில் தீர்மானமாக வெளியிடப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.