தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை அரசால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.


இலங்கை அரசால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் தற்போது மீண்டும் கைதான மீனவர்களை விரைந்து விடுவிக்கவும் மீனவர்களின் 79 படகுகளை மீட்கவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில் அப்பாவி மீனவர்களைக் கைது செய்வது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழக மீனவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவது மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாகும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...