தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க | 'நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம்' - முதல்வர் பேச்சு
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13-இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தோ்வை விலக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கைக்காக நீட் தோ்வின் தேவையை விட்டுவிட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பின், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவா்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்த மசோதாவை கடந்த 1-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் கடந்த 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது .
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது. இதில், தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது, அம்மசோதாஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல கோரிக்கை

சமூகப் பிளவைத் தூண்டும் ஜாத சங்கங்களைத் தடைசெய்யக் கோரி மனு

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சம் பறிமுதல்

கரூரில் அரசு கட்டட சுவா்களில் விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

