நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி தமிழக மக்களை அவமானப்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.
இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது காங்கிரஸ் தரப்பில் பேசிய எம்எல்ஏ செல்வப் பெருந்தகை பேசியதாவது:
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது, தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகவே காங்கிரஸ் கருதுகிறது.
'நீதிமன்றத்திற்கு பதில் சொல்லாமல் இருக்கலாம். சட்டங்கள் மூலமாக மக்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்' என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 200, 201 முறையே ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்து அம்பேத்கர் எழுதியிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் செத்து போகவில்லை; செத்தும் போகாது.
நீட் விலக்கு மசோதா என்பது பொதுப்பட்டியலில் வருகிறது. விதி 200-இன்படி இதனை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதுதான் முறையானது. ஆனால், ஆளுநர் இதனை சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆளுநர் அவரது வரம்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை முதல்வர் உணர்ந்து இச்சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
தமிழக மாணவர்களின் நலன் கருதி கமிட்டியை அமைத்து அவர்களின் பரிந்துரைக்கு ஏற்பவே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சமூக நீதிக்கான முதல்வர். 'தகுதி, திறமை எல்லாம் யோக்கியமானதாக இருக்காது' என பெரியார், அம்பேத்கர் சொன்னதைத் தான் முதல்வர் செயலாற்றிக்கொண்டு இருக்கிறார்.
நீட் விலக்கு மசோதாவை நிராகரிக்க ஆளுநர், ஒரு உச்சநீதிமன்ற வழக்கை மட்டும் காட்டியது ஏற்கத்தக்கல்ல.
தமிழக மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆளுநர் நிராகரித்துள்ளார். ஆளுநரின் குறிப்பும் தமிழக மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னதுபோல, தமிழகம் ஒருபோதும் தொட்டதை விடாது.
அதுபோல முதல்வர் ஸ்டாலின் ஹைவோல்டேஜ் முதல்வர், அவரை யாரும் நெருங்க முடியாது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்

சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?
சிலிண்டர் தட்டுப்பாடு: மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு!

வார பலன்கள்: 12 ராசிக்கார்களுக்கும்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

