தென்தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.10) இடியுடன்

கோப்புப் படம்

கோப்புப் படம்
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.10) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:
தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.10) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
பிப்.11: தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.11) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
பிப்.12: தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பிப்ரவரி 12-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
பிப்.13: ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூா், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 13-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...