வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணி பாதிப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது.


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது.
காற்று சுழற்சி காரணமாக கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு இருப்பதால் உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் ஏற்பட்ட மழைப் பொழிவு வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 69.6 மி.மீ, தலைஞாயிறு 23.2 மி.மீ, கோடியக்கரையில் 80 மி.மீ மழை பதிவானது.
வேதாரண்யம் பகுதியில் கனமழை தொடர்வதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...