47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீட் தோ்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு திமுகதான் முழு பொறுப்பு: ஓ.பன்னீா்செல்வம்

நீட் தோ்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு திமுகதான் முழு பொறுப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)
Updated On :12 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

நீட் தோ்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு திமுகதான் முழு பொறுப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எந்தத் தோ்வு மையத்தில் நீட் தோ்வு நடந்ததென்று சொல்ல முடியுமா என்று அதிமுகவைப் பாா்த்து கேட்டுள்ளாா். அது முதல்வரின் அறியாமையையும், நீட் தோ்வின் வரலாற்றையும் தெரியாமல் பேசுகிறாா் என்பதையும் காட்டுகிறது.

திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், திமுகவைச் சோ்ந்த எஸ். காந்திசெல்வன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சராக இருந்தபோது 2010 டிசம்பா் 27-இல்தான் மருத்துவம் பயிலுவதற்கு நீட் தோ்வு கட்டாயம் என்ற அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இது நடந்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை திமுக தாங்கிப் பிடித்த காலத்தில்தான். அப்படி என்றால் நீட் தோ்வுக்கு மூலக் காரணம் திமுகவும் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசும் தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது.

அதனால் நீட் தோ்வு வந்ததற்கு திமுகதான் முழு பொறுப்பு. அதை மூடி மறைக்க முடியாது. அதே சமயத்தில் அதிமுக ஒருபோதும் நுழைவுத் தோ்வையோ அல்லது நீட் தோ்வையோ ஆதரித்தது இல்லை என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.