பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

தொடர்ந்து கசியும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்: வணிக கணித வினாத்தாளும் கசிந்தது

தமிழகத்தில் 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிவது தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிவது தொடர்ந்து வருகிறது.

ஏற்கனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கான உயிரியல் பாடத்தின் வினாத்தாள் கசிந்த நிலையில், இன்று நடக்கும் வணிக கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளது.

வந்தவாசி பகுதியில் திருப்புதல் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடா்பாக, தனியாா் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் பொன். குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிளஸ்-2 கணிதத் தோ்வு, பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானதாக பள்ளிக் கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், பொன்னூா் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படும் அந்தத் தனியாா் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் பொன். குமாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா். மேலும் சில பள்ளிகளிலும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோரிடம் அவா் விசாரித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருட்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வி ஆணையம் கூறியுள்ளது. 

10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த நிலையில் +2 வினாத்தாளும் கசிந்துள்ளது. +2 திருப்புதல் தேர்வுக்கான உயிரியல் பாட வினாத்தாள் கசிந்தது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் வணிக கணிதம் பாடத்தின் வினாத்தாளும் கசிந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com