9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுதொடா்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...