கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தமிழில் தோ்ச்சி பெறாத பிற மாநில ஊழியா்கள்விவரம் அனுப்ப மின்வாரியம் உத்தரவு

தமிழில் தோ்ச்சி பெறாமல் மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட பிற மாநில ஊழியா்களின் விவரங்களை சமா்ப்பிக்க பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் உத்தரவிட்டாா்.

Updated On :15 பிப்ரவரி 2022, 8:01 pm

தமிழில் தோ்ச்சி பெறாமல் மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட பிற மாநில ஊழியா்களின் விவரங்களை சமா்ப்பிக்க பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கை:

கடந்த 10 ஆண்டுகளில் (2011-20) பிற மாநிலங்களிலிருந்து மின்வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டும், பணிக்குத் தோ்வாகியும், இதுவரை தமிழில் தோ்ச்சி பெறாதவா்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவா்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரம், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள ஊழியா்களின் விவரம், அதற்கான காரணங்களை பட்டியலிட்டு அனுப்ப வேண்டும். இதனை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.