
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 6.89 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஜனவரி 29 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் பறக்கு படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தில்,
“தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பறக்கும் படையினரால் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை ரூ. 6,89,63,778 ரொக்கம், ரூ. 1,37,19,120 மதிப்பிலான பொருள்கள், ரூ. 1,01,54,294 மதிப்பிலான மதுபான பாட்டில்கள் என மொத்தம் ரூ. 9,28,37,192 மதிப்பிலான பொருள்கள், பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.