தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல்: உயர்நீதிமன்றத்தில் அறிக்கை
உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

தமிழக அரசு

தமிழக அரசு
உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக செய்தி, மக்கள் தொடர்புத்துறை செயலாளர் ஜெயசீலன் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,
உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பின், குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு பிரஸ் கவுன்ஸிலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அங்கீகார அட்டை பெறுவதற்கு 2021ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இரண்டு வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...