சாமியாரிடம் ஆலோசனை: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு  தொடர்புடைய இடங்களில் சோதனை

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு  தொடர்புடைய இடங்களில் சோதனை
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு  தொடர்புடைய இடங்களில் சோதனை
Updated on
1 min read

மும்பை: தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

தேசியப் பங்குச் சந்தையின் முக்கிய செயல்பாடுகள் குறித்து சாமியார் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி, அதன்படி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு  தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

சித்ரா ராமகிருஷ்ணா மீதான புகாரின் அடிப்படையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை நடத்தி வருகிறது.

ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தேசியப் பங்குச் சந்தையில், தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாகவும், இமயமலையில் இருப்பதாகக் கூறப்படும் சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை தொடர்பாக ஆலோசித்து, அவர் சொல்லும் அறிவுரைப்படி, முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்குச் சொந்தமான சென்னை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com