சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகளே பதிவு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சென்னையில் காலை முதலே மந்தமான வாக்குப்பதிவு தொடர்கதையாகி இருக்கிறது.
சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகளே பதிவு
சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகளே பதிவு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சென்னையில் காலை முதலே மந்தமான வாக்குப்பதிவு தொடர்கதையாகி இருக்கிறது.

சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகளே பதிவாகியிருப்பதாகவும், தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில்தான் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

காலை 9 மணி நிலவரப்படி, வெறும் 3.96% வாக்குகள் பதிவாகியிருந்தது. அப்போது தமிழகத்தில் 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி சென்னையில் 17.88 சதவீத வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்னை மக்கள் விரும்பவில்லையா? இல்லை 4 மணிக்கு மேல் வாக்களிக்கவிருக்கிறார்களா? என்பது 6 மணிக்குத்தான் தெரியவரும்.

சென்னை மட்டுமல்லாமல், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஆவடி மற்றும் தாம்பரத்திலும் மந்தமான வாக்குப்பதிவு நிலவுகிறது.

சென்னையில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மந்தமான வாக்குப்பதிவே நடந்ததாக வாக்குப்பதிவு நிலவரம் தெரிவித்தது. எனினும், நேரம் செல்ல செல்ல வாக்குப்பதிவு சூடுபிடிக்கும் என மாநில தேர்தல் ஆணையர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதில் மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு, தமிழகத்தில் இரண்டு மணி நேரத்தில் பதிவான வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகின. அதில், சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியிருந்தது. ஆனால், மாலை 3 மணி வரையிலும் மந்தமான வாக்குப்பதிவே தொடர்ந்தது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறுகையில், சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதமும், தாம்பரத்தில் 3.30 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னையைப் பொருத்தவரை காலையில் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்டது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை.

எனினும், நேரம் செல்ல செல்ல சென்னையில் வாக்குப்பதிவு சூடுபிடிக்கும் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

12,838 பதவியிடங்களுக்கு...: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள 12,838 இடங்களுக்கான தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். இவற்றில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 14,324 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இது தவிர மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் களத்தில் 57,778 போ்: இதையடுத்து, மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 28,660 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 778 தோ்தல் களத்தில் உள்ளனா்.

பிப்.22-இல் வாக்கு எண்ணிக்கை
வரும் 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com