மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் புதிதாக 788 பேருக்கு கரோனா; சென்னையில் 191

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 788 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 3:30 pm

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 788 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நேற்று 949 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று 70,379 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதிதாக 788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,45,717-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதால் மொத்த உயிரிழப்பு 37,981 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 2,692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 33,93,703-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மொத்தமாக 6,39,61,280 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 191 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,48,999ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.