காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கறம்பக்குடி பேரூராட்சியில் ஒரு வாக்குகூட பெறாத அதிமுக வேட்பாளர்

புதுக்கோட்டை  மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இப்ராகிம்ஷா ஒரு வாக்கு கூட பெறவில்லை.

News image

அதிமுக வேட்பாளர் இப்ராகிம்ஷா

Updated On :22 பிப்ரவரி 2022, 9:44 am

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை  மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இப்ராகிம்ஷா ஒரு வாக்கு கூட பெறவில்லை.

அதே வார்டில் 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்தும் ஒரு வாக்கு  கூட பெறாதது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகள் 11 வார்டில் திமுக கூட்டணியும், அதிமுக, சுயேச்சைகள் தலா 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்த பேரூராட்சியில் 7-வது வார்டில் திமுக சார்பில் ப.பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராஹிம்ஷா, நாம்தமிழர், மார்சிஸ்ட் லெனினிஸ்ட், சுயேச்சைகள் உள்பட 6 பேர் போட்டியிட்டனர்.

அதில், சுயேச்சையாக போட்டியிட்ட ப. பிரதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ப.பரூக் 149 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். அதிமுக வேட்பாளரான முகமது இப்ராகிம்ஷாவிற்கு 1 வாக்கு கூட பதிவாகவில்லை.

அதே வார்டுக்கு உள்பட்ட பகுதியில் 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வசித்துவரும் இவருக்கு, 1 வாக்கு கூட பதிவாகவில்லை என்பது புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே வார்டில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் க.தர்மராஜ் என்பவரும் 1 வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.